/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் கிடைத்த ரூ.10,000 போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்
/
ஏ.டி.எம்.,மில் கிடைத்த ரூ.10,000 போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்
ஏ.டி.எம்.,மில் கிடைத்த ரூ.10,000 போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்
ஏ.டி.எம்.,மில் கிடைத்த ரூ.10,000 போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்
ADDED : ஆக 13, 2025 04:43 AM

பெரும்பாக்கம் : ஏ.டி.எம்., மையத்தில் கிடைத்த, 10,000 ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்களை போலீசார் பாராட்டினர்.
பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், 35, கிஷோர், 25. இவர்கள் பணம் எடுக்க, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றனர்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில், பணம் இருந்தது. யாரோ பணத்தை எடுக்காமல் சென்றுள்ளனர். அவற்றை எண்ணிப் பார்த்ததில் 10,000 ரூபாய் இருந்தது. உடனே, பணத்தை பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த வாலிபர்களை பெரும்பாக்கம் போலீசார் பாராட்டினர். ஏ.டி.எம்.,மில், பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றது யார் எனவும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.