/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்
/
வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்
வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்
வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்
ADDED : ஜன 18, 2025 12:44 AM
நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூர்யா, 24. விஜயகணபதி, 22. இவர்கள் நண்பர்களுடன் நேற்று முன்தினம், திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருமால்பூர் காலனி கிராமத்தைச் சேர்ந்த பிரேம், 22, உள்ளிட்ட சிலர், சூர்யா, விஜய கணபதி ஆகியோரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றனர்.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், தெருவில் பிரேம் உள்ளிட்ட சிலர், பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக, அடுத்த நாள் பிரேம் கூட்டாளிகளுடன் சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், கொடூர சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும் என, நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் திருமால்பூர் - பனப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெமிலி போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், திருமால்பூர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரேம், 22, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து, மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, நெமிலி பகுதியில் நெல்வாய் கிராமத்தினர், நேற்று மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.