/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
/
மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
ADDED : ஜன 06, 2024 12:04 AM

சென்னை, அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, தென்மேற்கு மண்டல அளவிலான நீச்சல் போட்டியை, வேளச்சேரியில் மூன்று நாட்கள் நடத்தின.
இதில் முதல் முறையாக, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 125 பல்கலையில் இருந்து, 700க்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இருபாலருக்கும், பட்டர்பிளை, பிரீஸ்டைல் மற்றும் டைவிங் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை போட்டிகள் நிறைவடைந்து, பரிசளிப்பு விழா நடந்தது.
அனைத்து போட்டிகள் முடிவில், பெண்களில் பெங்களூர் ஜெயின் பல்கலை அணி, 104 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து, 85 புள்ளிகளில் சென்னை பல்கலை இரண்டாம் இடமும், சாவித்ரிபாய் பூலே புனே பல்கலை அணி 71 புள்ளிகளில் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
அதேபோல் ஆடவரில், 101.5 புள்ளிகளில் பெங்களூரு ஜெயின் பல்கலை, 86 புள்ளிகளில் அண்ணா பல்கலை, 52 புள்ளிளில் கிரிஸ்ட் பல்கலை அணிகள் முறையே மூன்று இடங்களை வென்றன.