/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல கபடி செயின்ட் ஜோசப் கல்லுாரி 'கில்லி'
/
மண்டல கபடி செயின்ட் ஜோசப் கல்லுாரி 'கில்லி'
ADDED : நவ 23, 2024 12:21 AM

சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள் நடக்கின்றன.
அதன்படி, மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டி திருச்சி, தொட்டியத்தில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், 24 மண்டலங்களில் வெற்றி பெற்ற கொங்கு பொறியியல் கல்லுாரி, ஜேப்பியார், செயின்ட் ஜோசப், தஞ்சை அரசு கல்லுாரி உள்ளிட்ட அணிகள், 'நாக் - அவுட்' முறையில் மோதின. இதன் அரையிறுதியில், சென்னை செயின்ட் ஜோசப் மற்றும் சென்னை லயோலா அணிகள் மோதின.
அதில், 50 - 18 என்ற கணக்கில், செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் ஜோசப் அணி, 46 - 27 என்ற கணக்கில், கொங்கு பொறியியல் கல்லுாரியை வீழ்த்தி வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.