sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உளவாளியை கைது செய்து ஆத்திரம் தீர்த்த போலீஸ்! நக்சல் ரெய்டில் நடந்தது என்ன? வீடியோ படம் ஆய்வு

/

உளவாளியை கைது செய்து ஆத்திரம் தீர்த்த போலீஸ்! நக்சல் ரெய்டில் நடந்தது என்ன? வீடியோ படம் ஆய்வு

உளவாளியை கைது செய்து ஆத்திரம் தீர்த்த போலீஸ்! நக்சல் ரெய்டில் நடந்தது என்ன? வீடியோ படம் ஆய்வு

உளவாளியை கைது செய்து ஆத்திரம் தீர்த்த போலீஸ்! நக்சல் ரெய்டில் நடந்தது என்ன? வீடியோ படம் ஆய்வு


ADDED : அக் 07, 2011 12:43 AM

Google News

ADDED : அக் 07, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சேலம் மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்களை போன்று துப்பாக்கிகளுடன் சிலர் முகாமிட்டிருப்பதாக உளவுத் தகவல் அளித்த 'இன்பார்மரை' போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக டி.ஐ.ஜி., விசாரணை நடத்தி, தலைமையிடத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் தொட்டி மடுவு என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு, 'நக்சலைட்டுகளை போன்ற தோற்றத்துடன் கூடிய மர்ம நபர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடமாடுவதாகவும், முகாம் அமைத்து பதுங்கியிருப்பதாகவும், கடந்த மாதம் 23ம் தேதி, ஆச்சான்குட்டைபதி பாரஸ்டர் அப்புசாமி (51) என்பவர், பாப்பிரெட்டிபட்டி வன ரேஞ்சர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உஷாரடைந்த வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து உஷார்படுத்தினர். சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவைத் தொடர்ந்து ஏ.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறை, போலீஸ், வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடுவதாக கூறப்பட்ட வனப்பகுதியில் நாள் முழுவதும் சோதனை நடந்தது. உளவுத்தகவல் அளித்ததாக கூறப்படும் சேலம், மூக்கனூரைச் சேர்ந்த ராமர் (எ) ராமசாமி(42), பாரஸ்டர் அப்புசாமி ஆகியோரும் உடனிருந்தனர்; ஆனால், மர்ம நபர்கள் குறித்து தகவல் இல்லை. இதனால் போலீசாரின் கோபம், உளவுத்தகவல் அளித்த ராமசாமியின் மீது திரும்பியது. கற்பனையான தகவலை தெரிவித்து வருவாய்த்துறை, வனத்துறை, போலீஸ்துறையினரின் ஒரு நாள் வேலையை 'கெடுத்து' வீணாக அலைய வைத்ததாக கருதினர். பாரஸ்டர் அப்புசாமியிடம் புகார் பெற்று, 'இன்பார்மர்' ராமசாமி மீது வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசாரின் இந்நடவடிக்கை, இதுவரை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்து வந்த இன்பார்மர்களை கலக்கமடையச் செய்திருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் ரகசிய தகவல் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் சேலம் போலீஸ் அதிகாரிகளில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, சேலம் ரேஞ்ச் டி.ஐ.ஜி., (கூடுதல் பொறுப்பு) பாலநாகதேவி விசாரணை நடத்தினார். அப்போது, ' இன்பார்மர் ராமசாமி, திட்டமிட்டு தவறான உளவுத்தகவலை அளித்தது மூலமாக வனத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் போலீசாரின் ஒரு நாள் வேலை பாதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, அவரை கைது செய்து சிறையில் அடைக்க நேர்ந்தது' என, சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், வனத்தில் நடத்தப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கை தொடர்பான வீடியோ பட காட்சிகளும் டி.ஐ.ஜி.,க்கு காண்பிக்கப்பட்டன. வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டபின், இதுகுறித்த விசாரணை அறிக்கை மாநில போலீஸ் தலைமையிடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:'இன்பார்மர்' என்பவர், தாமாக முன் வந்து பொதுநல நோக்கிலோ அல்லது வெகுமதிக்கு ஆசைப்பட்டோ உளவுத் தகவல் அளிப்பவர். அவர்கள் அளிக்கும் தகவல் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உத்தரவாதம் ஏதுமில்லை; அதற்கான அவசியமும் கிடையாது. ஒரு நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு கிடைக்கும் உளவுத்தகவலை போலீசார்தான் பல கோணங்களிலும் விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; அது, கடமையும் கூட. அதை விடுத்து, தவறான தகவல் அளித்ததாக கூறி இன்பார்மரை கைது செய்தால், மற்றவர்கள் தகவல் அளிக்க அஞ்சுவர். உளவுத் தகவல் தெரிவிக்கும் முன் இன்பார்மரே விசாரணை நடத்தி, சம்பவத்தை உறுதிப்படுத்திய பிறகுதான் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமென அதிகாரிகள் நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது; அது, இன்பார்மரின் வேலையும் அல்ல. அரசிடம் ஊதியம் பெற்று பணியாற்றும் போலீசாரின் கடமை. ஒருவேளை, இன்பார்மர் தவறான தகவல் அளித்திருந்தாலும் கூட, அடுத்த முறை அந்நபர் கூறுவதை நம்பாமல் விட்டுவிடலாமே தவிர, கைது செய்து சிறையில் தள்ளுவது கடுமையான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us