/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோர் உதவித்தொகை மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் திணறல்
/
முதியோர் உதவித்தொகை மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் திணறல்
முதியோர் உதவித்தொகை மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் திணறல்
முதியோர் உதவித்தொகை மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் திணறல்
ADDED : ஜூலை 11, 2011 09:48 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை
வேண்டி மனுக்கொடுப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்களால்
அதிகாரிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது.அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ்
மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படுகிறது. அதனால், உதவித்தொகையை பெற முதியோர்கள் போட்டி
போட்டுக்கொண்டு விண்ணப்பம் கொடுக்க துவங்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல்
நெருங்கிக்கொண்டுள்ளதால் கிராமத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள்,
முதியோர்களுக்கு மனு எழுதி கொடுத்து தாலுகா அலுவலகத்தில் கொடுங்கள்,
சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொடுங்கள் என்று வழிகாட்டுகின்றனர். ஆனால்,
மனுக்களில் எவ்வித ஆவணங்களையும் இணைக்காமல்
கொடுத்தனுப்புகின்றனர்.பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தியில் மொத்தம்
14,859 மனுக்கள் பெறப்பட்டன. அதில், பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை
வேண்டி 10,378 விண்ணப்பங்கள் இடம் பெற்றிருந்தன. இதுதவிர பொள்ளாச்சி
சப்-கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் குறைதீர்ப்பு நாள்
கூட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் உதவித்தொகை வேண்டி மனு
கொடுக்கின்றனர்.இந்த மனுக்கள் அனைத்தும் சமூக நல பாதுகாப்பு திட்ட
தனித்தாசில்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவையும் ஆய்வு
செய்யத்துவங்கியுள்ளனர். பெரும்பாலான மனுவில் பெயர், முகவரி மட்டுமே
எழுதப்பட்டுள்ளது. வயது, வருமானம், குடும்பத்தினரின் ஆதரவு நிலை குறித்து
எவ்வித ஆவணமும் இணைக்கப்படவில்லை. கிராமம் வாரியாக மனுக்களை பட்டியலிட்டு
நேரடி ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சமூக நல பாதுகாப்பு திட்ட
அதிகாரிகள் கூறியதாவது:அரசு பல்வேறு திட்டத்தின் கீழ் மாதம் தோறும்
உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. முதியோர் உதவித்தொகைக்கு 65 வயது
நிரம்பியிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கு 18 வயது
பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட
பெண்களகுளுக்கு 45 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். விவசாய
தொழிலாளர்களுக்கு 60 வயதும், முதிர்கன்னிகளுக்கு 50 வயதும் நிரம்பியிருக்க
வேண்டும்.வயது குறித்த மருத்துவசான்று, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளதற்காக
அந்த ஊராட்சிகளில் பெறப்பட்ட சான்றுகளை இணைத்திருக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியல் எண் குறிப்பிட்டிருக்க
வேண்டும்.விசாரணையின் போது, சொந்த வீடு, வீட்டின் நிலை மற்றும் மதிப்பு,
வாரிசுகள் விபரம், குடும்பத்தில் வேறு யாராவது உதவித்தொகை பெறுகிறார்களா,
ஏற்கனவே உதவித்தொகை பெறப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கான காரணம்,
உழைக்கும் திறன் உள்ளவர்களா, அரசின் வேறு திட்டத்தில் உதவித்தொகை
பெறுகிறார்களா போன்ற விபரங்களை ஆய்வு செய்வோம்.இவை அனைத்துக்கும் தேவையான
சான்றுகள், ஆவணங்கள் ஒப்படைத்தால் அரசு உதவித்தொகைக்கு உடனடியாக பரிந்துரை
செய்யப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.உதவித்தொகை வேண்டி
விண்ணப்பம் கொடுப்பவர்கள் இந்த விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலும், வயது, வறுமைக்கோடு எண்ணை கட்டாயம் நிரப்பி கொடுக்க வேண்டும் என்று
வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.