/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதன் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இன்று முழு உடல் பரிசோதனை முகாம்
/
முதன் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இன்று முழு உடல் பரிசோதனை முகாம்
முதன் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இன்று முழு உடல் பரிசோதனை முகாம்
முதன் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இன்று முழு உடல் பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 27, 2011 02:37 AM
கோவை : தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் பள்ளிகளில், தமிழகத்தில் முதன்முறையாக மாணவர்களுக்கான, முழு உடல் இயக்க மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும், கண், காது, பல் என தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் முழு உடல் இயக்க பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், தேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்களின் மூலம் தலை முதல் பாதம் வரை மாணவர்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு, ஏதாவது குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக அந்தந்த கல்வி மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாடல் பள்ளியில், பரிசோதனை முகாம் நடக்கிறது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஒரே நேரத்தில் மாணவர்களின் உடலில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக இந்த மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. பாரபட்சமுமின்றி மாடல் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தி குறைகள் களையப்படும். அதன்படி, நாளை (இன்று) கோவை கல்வி மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சியில் சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பூரில் நொய்யல் வீதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது,'' என்றனர்.