/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு, கல்வி, மருத்துவம்; பெருமைக்குரிய அடையாளங்கள் :ஆர்.எஸ்.எஸ்., தென்மண்டல அமைப்பாளர் பேச்சு
/
உணவு, கல்வி, மருத்துவம்; பெருமைக்குரிய அடையாளங்கள் :ஆர்.எஸ்.எஸ்., தென்மண்டல அமைப்பாளர் பேச்சு
உணவு, கல்வி, மருத்துவம்; பெருமைக்குரிய அடையாளங்கள் :ஆர்.எஸ்.எஸ்., தென்மண்டல அமைப்பாளர் பேச்சு
உணவு, கல்வி, மருத்துவம்; பெருமைக்குரிய அடையாளங்கள் :ஆர்.எஸ்.எஸ்., தென்மண்டல அமைப்பாளர் பேச்சு
ADDED : செப் 25, 2011 01:20 AM
கோவை :''உணவு, கல்வி, மருத்துவம் இம்மூன்றும் இந்த தேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள்; இவற்றை விற்கக் கூடாதென்கிற உன்னதமான எண்ணம் நம் முன்னோர்களிடையே இருந்தது'' என்று, தென்மண்டல ஆர்.எஸ்.
எஸ்., அமைப்பாளர் சேதுமாதவன் பேசினார்.டாக்டர் லஜ்பத்ராய் மெஹ்ராவின் நியூரோதெரபி மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்போருக்கான இரண்டு நாள், மாநில மாநாட்டின் துவக்க விழா, மாரண்ண கவுடர் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது; ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில் (கிழக்கு) உள்ள யோகிக் யோகா மையத்தில் மருந்தில்லா மருத்துவம் குறித்த இலவச விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று நடக்கிறது. மாநாட்டில், புத்தாக்கப் பயிற்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து தென்மண்டல ஆர்.எஸ். எஸ்., அமைப்பாளர் சேதுமாதவன் பேசியதாவது:ஒவ்வொரு மனிதனும் சுகமாக வாழ வேண்டும் என்று நினைப்பதுதான் பாரதத்தின் பண்பாடு. இதனால்தான், நமது முன்னோர்கள் பல்வேறு மருத்துவமுறைகளை பின்பற்றினர். இந்த தேசத்தின் பூர்வீக மருத்துவ முறைகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது பாரம்பரிய மருத்துவ முறைகள், குறைந்த செலவில் விரைவான மற்றும் முழுமையான நிவாரணம் அளிக்கக் கூடியன. எலும்பை உடைக்கும் ஜாம்பாவதி, குஸ்தி போன்று அடித்து உதைக்கும் பீமசேனை, நரம்பு மண்டலத்தை அழுத்துவதன் மூலம் எதிரிக்கு வலி உண்டாக்கும் ஹனுமந்தி உள்ளிட்ட பாரம்பரிய யுத்த முறைகள் கூட, உடல் கூறுகள் குறித்த நம் மூதாதையர்களின் அலாதி அறிவுக்கு சாட்சி சொல்கிறது. உடல் மற்றும் மனம் குறித்த தெளிவான புரிதல் நம் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்தது.இன்றைக்கு மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் காசாகிப் போனது. உணவு, கல்வி, மருத்துவம் இம்மூன்றும் இந்த தேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள்; இவற்றை விற்கக் கூடாது என்கிற உன்னதமான எண்ணம் நம் முன்னோர்களுக்கு இருந்தது. எவர் ஒருவரையும் பட்டினியாக இருக்க விடுதல் கூடாது என்பதுதான் நம்முடைய பாரதப் பண்பாடு. காகத்துக்கு உணவு வைப்பதும், பூச்சி, புழு உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கு உணவு படைக்க மாக்கோலமிடுவதும் இந்த உன்னத கலாசாரத்தின் வெளிப்பாடே.கல்வி எவருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், ஆங்காங்கே இருந்த குருகுலங்கள் அனைத்திலும், அனைவருக்கும் கல்வி போதிக்கப்பட்டது; மருத்துவமும் அப்படித்தான் இருந்தது.நீங்கள் ஒவ்வொருவரும், இந்த நியூரோதெரபி மருத்துவ முறையில் புதிய புதிய ஆழங்களை கண்டறிந்து, ஆய்வுகள் மேற்கொண்டு சிறப்பாக தேசப்பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, சேதுமாதவன் பேசினார்.மாநில தன்வந்திரி நியூரோதெரபி பொறுப்பாளர் சுந்தரராஜன் பேசியது:டாக்டர் லஜ்பத்ராய் மெஹ்ராவின் 60 ஆண்டு கால ஆய்வின் அடிப்படையில் உருவானதுதான் நியூரோதெரபி எனப்படும் இந்த மருந்தில்லா மருத்துவம். 1999 -2000ம் ஆண்டு முதல், மும்பை அருகில் சூர்யமால் என்னும் இடத்திலுள்ள டாக்டர் லஜ்பத்ராய் மெஹ்ராவின் ஆஸ்ரமத்தில், நியூரோதெரபி மருத்துவமுறை பயிற்றுவிக்கப்படுகிறது. இது, நான்கு மாத கால பயிற்சி வகுப்பு; இதுவரை 30க்கும் மேற்பட்ட 'பேட்ச்'கள் பயிற்சியை முடித்துள்ளன. மத்திய பிரதேச அரசு, அங்குள்ள மலைவாழ் மக்கள் இப்பயிற்சியைப் பெற வேண்டும் என்னும் நோக்த்துடன், இது வரை 150க்கும் மேற்பட்டோரை பயிற்சிக்கு அனுப்பியுள்ளது. உடலில் உள்ள நரம்பு மண்டலம் மற்றும் சுரப்பிகள் இரண்டும் முறையாக இயங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் ஏதாவது தடங்கல் நேர்ந்தால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்தினால், அது தொடர்பான நோய்களும் சரியாகும். இந்த அடிப்படையில் சுரப்பிகளை சரியாக இயங்கச் செய்வதற்காக, உடலின் பல பகுதிகள் இதமாக அழுத்தப்படுகின்றன. இந்த மருத்துவமுறையில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டு.இவ்வாறு, சுந்தரராஜன் கூறினார்.கே.எம்.சி.எச்., நர்சிங் கல்லூரி முதல்வர் மாதவி, கிருஷ்ணமூர்த்தி, ஆச்சார்யா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.