sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அல்லப்பாளையம் மக்கள் சரமாரி புகார் ஓட்டு கேட்கச் சென்ற எம்.எல்.ஏ., திணறல்

/

அல்லப்பாளையம் மக்கள் சரமாரி புகார் ஓட்டு கேட்கச் சென்ற எம்.எல்.ஏ., திணறல்

அல்லப்பாளையம் மக்கள் சரமாரி புகார் ஓட்டு கேட்கச் சென்ற எம்.எல்.ஏ., திணறல்

அல்லப்பாளையம் மக்கள் சரமாரி புகார் ஓட்டு கேட்கச் சென்ற எம்.எல்.ஏ., திணறல்


ADDED : அக் 05, 2011 10:12 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர் : ஓட்டுக் கேட்கச் சென்ற எம்.எல்.ஏ.,விடம் அல்லப்பாளையம் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்

தனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கு இருவாரங்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. அ.தி.மு.க, வேட்பாளர்களை ஆதரித்து, அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி நேற்று முன்தினம் அல்லப்பாளையம் ஊராட்சியில், ருத்திரியம்பாளையம் மற்றும் ஆதிதிராவிட காலனியில் பேசுகையில்,''பெண் திருமணத்துக்கு உதவி தொகையுடன் தங்கமும் சேர்த்து தமிழக அரசு தருகிறது.

அரசு துவக்கப்பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு வரை கல்வி கட்டணம் இல்லை. 10, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது,'' என்றார்.

எம்.எல்.ஏ., பேசி முடித்ததும், ருத்திரியம்பாளையம் ஆதிதிராவிட காலனி மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில்,'' ஊருக்கு கிழக்கே உள்ள வீடுகளில் இரண்டு தலைமுறையாக குடியிருந்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை. ஒரு மேல்நிலைத்தொட்டி மட்டும் உள்ளதால், தண்ணீர் போதுமானதாக இல்லை. பொதுக்கழிப்பிடம் இல்லை.

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். 40 வீடுகளுக்கு மின் இணைப்புக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஒரு தனிநபர் வீதியின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டியுள்ளார். இதனால் நீண்ட தொலைவுக்கு சுற்றி மெயின்ரோடு செல்ல வேண்டி உள்ளது. பாதி தெரு விளக்குகள் எரிவதில்லை,'' என்று புகார் தெரிவித்தனர்.

மக்களிடம் எம்.எல்.ஏ., கூறுகையில், ''உடனே நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருகிறேன். இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தாருங்கள்'' என, கேட்டுக் கொண்டார்.

அவருடன் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் அமுல் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் கண்ணம்மாள், ஊராட்சி தலைவர் வேட்பாளர் வெங்கிடுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us