/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தத்தளிப்பவர்களை காப்பாற்றலாம் எளிதாக... : தீயணைப்பு துறை செயல் விளக்கம்

ADDED : செப் 25, 2011 01:18 AM
பொள்ளாச்சி :பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில், நீரில் சிக்கி தத்தளிப்பவர்களை காப்பாற்றி முதலுதவி அளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில், ஆழியாறு ஆற்றில் நடந்த செயல்விளக்க நிகழ்ச்சிக்கு, கோட்ட தீயணைப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். உதவி கோட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவை நிலைய அலுவலர் அண்ணாதுரை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், தீத்தடுப்புக்குழு நிலைய அலுவலர் டவுளத்முகமது, பொள் ளாச்சி சப்-கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தனர்.ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் ஒருவரை, தனி நபராக சென்று காப்பாற்றுவது, கும்பலாக சிக்கிக் கொண்டவர்களை கயிறு கட்டி காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கி மயக்க நிலைக்கு சென்றவர்களை, ரப்பர் படகை பயன்படுத்தி காப்பாற்றுவது குறித்து, பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஆறு வீரர்கள் விளக்கம் அளித்தனர். 'தண்ணீரில் தத்தளிப்பவர்களின் முடியை பிடித்து இழுத்து வர வேண்டும். காப்பாற்ற செல்பவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது' என அறிவுரை வழங்கினர்.