/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!
/
அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!
அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!
அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!
ADDED : ஜூலை 25, 2011 09:38 PM
பேரூர் : பொதுக்குழு கூட்டத்துக்காக கோவை வந்த வெளியூர் தி.மு.க., வினர், புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட குவிந்தனர்.
கோவையில் தி.மு.க., வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் கோவையில் குவிந்தனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த 24, 25ம் தேதிகளில், புறநகர் பகுதியிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களை நோக்கி தி.மு.க., வினர் படையெடுத்தனர். முக்கியமாக, மருதமலை சுப்ரமணியசாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஈஷா யோக மையம் ஆகிய பகுதிகளுக்கு, தி.மு.க.,வினர் காலை முதல் மாலை வரை வந்த வண்ணம் இருந்தனர். வாகனங்களின் முன் தி.மு.க., கொடியை பறக்கவிட்டவாறு, கரைவேட்டி சகிதமாக வந்திறங்கிய தி.மு.க., வினர், கோவிலுக்குச் சென்று, நீண்டவரிசையில் நின்று சுப்ரமணியர், பட்டீஸ்வரரை பயபக்தியுடன் தரிசித்தனர். விபூதியை நெற்றியில் பூசியவாறு, கோவிலின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரங்களையும் ஆர்வத்துடன் சுற்றிவந்தனர். சிலர் கோவை குற்றாலம், கோவை கொண்டாட்டம் ஆகிய பகுதிகளுக்கும், 'விசிட்' அடித்தனர்.