/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி நகை கொடுத்து மோசடி: வடமாநிலத்தவர் இருவர் கைது
/
போலி நகை கொடுத்து மோசடி: வடமாநிலத்தவர் இருவர் கைது
போலி நகை கொடுத்து மோசடி: வடமாநிலத்தவர் இருவர் கைது
போலி நகை கொடுத்து மோசடி: வடமாநிலத்தவர் இருவர் கைது
ADDED : செப் 25, 2011 01:20 AM
கோவை : விலை உயர்ந்த தங்க நகைகள் குறைந்த விலைக்கு தருவதாக கூறி, மூன்று லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஆர்.எஸ்.புரம்., பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (45).
ரியல் எஸ்டேட் மற்றும் கார் புரோக்கர் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவரை சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள், தங்களிடம் குறைந்த விலையில் மதிப்புமிக்க தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாகவும், அவற்றை வாங்க விருப்பமா என கேட்டுள்ளனர்.மோகனசுந்தரம் விருப்பம் தெரிவித்து, மூன்று லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆறு அடி நீளமுள்ள தங்க நகையை அவரிடம் கொடுத்துள்ளனர். சந்தேகத்தின்பேரில், பட்டறைக்கு சென்று நகையை பரிசோதித்து பார்த்தபோது, அவை போலி என தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன சுந்தரம் ஆர்.எஸ்.புரம்., போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.விசாரித்து, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில்கிரி (52), ராம்கிரி (30) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று போலி தங்க ஆபரண மாலைகள், 14 போலி வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். குறைந்த விலையில் தங்க நகைகள் தருவதாக கூறும் மர்ம நபர்களிடம் இருந்து, போலி நகைகளை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் என, போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.