/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் பணம் வாங்குவதாக பொதுமக்கள் புகார்
/
அரசு மருத்துவமனையில் பணம் வாங்குவதாக பொதுமக்கள் புகார்
அரசு மருத்துவமனையில் பணம் வாங்குவதாக பொதுமக்கள் புகார்
அரசு மருத்துவமனையில் பணம் வாங்குவதாக பொதுமக்கள் புகார்
ADDED : ஜூலை 13, 2011 10:17 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சைக்கு வரும்
பொதுமக்களிடம் இருந்து பணம் வாங்குவதாக புகார் எழுத்துள்ளது.
பொள்ளாச்சி
அரசு மருத்துவமனை கடந்த 76 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும்
1,500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வருகின்றனர். நோயாளிகளுக்கு
சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றும்
பணியாளர்கள் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து பணம் வாங்குவதாக
புகார் எழுந்துள்ளது. மருந்தகம், நோயாளிகளுக்கு சீட்டு எழுதும் பகுதி,
வார்டுகள் போன்றவற்றில் இருந்து பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்வதாக
பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை
அதிகாரிகள் கூறியதாவது: இங்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு
வருகிறது. இங்கு பணியாற்றும் சில பணியாளர்கள் சேவை செய்யும்
நோக்கில்லாமல், பொதுமக்களிடம் இருந்து பணம் வாங்கி வருகின்றனர். பணம்
வாங்கும் பணியாளர்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,
என்றனர்.

