sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணவன், மனைவி கொலை தனிப்படை போலீஸ் விசாரணை

/

கணவன், மனைவி கொலை தனிப்படை போலீஸ் விசாரணை

கணவன், மனைவி கொலை தனிப்படை போலீஸ் விசாரணை

கணவன், மனைவி கொலை தனிப்படை போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 13, 2011 10:21 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : விவசாயத் தோட்டத்தில் குடியிருந்த கணவன், மனைவியை, கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட் டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு, வண்ணான் படுகையை சேர்ந்த விவசாயி பழனிசாமி(54); மனைவி ராஜாமணி(53). இருவரும் விவசாயத் தோட்டத்தில் குடியிருந்து வந்தனர். கடந்த 10ம் தேதி தோட்டத்தின் ஓரமுள்ள பவானி ஆற்றுத் தண்ணீரில் பழனிசாமி யின் உடல் மிதந்ததை கண்டவர்கள், இவரது மகன் குமாரசாமிக்கு தகவல் தெரிவித்தனர். பழனிசாமியின் உடலை கைப்பற்றிய போது உடலில் காயங்கள் இருந்தன. தோட்டத்துக்கு சென்று பார்த்த போது தாய் ராஜாமணியை காணவில்லை. உறவினர் கடந்த நான்கு நாட்களாக பல இடங்களில் தேடினர். இந்நிலையில் 12ம் தேதி மாலை, வச்சினம்பாளை யம் 'பம்ப் ஹவுஸ்' அருகே பவானி ஆற்றுத் தண்ணீரில் மிதந்த ராஜாமணியின் உடலை போலீசார் கைப்பற்றினர். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. பெற்றோர் இறப்பு சந்தேகத்துக்கு இடமளிக் கும் வகையில் உள்ளது என, மேட்டுப் பாளையம் போலீசில் மகன் குமாரசாமி புகார் செய்தார். கணவன், மனைவி இருவரையும் எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீ சார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us