/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசு
/
காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசு
காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசு
காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 17, 2011 01:11 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பல்வேறு அமைப்புகள் சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி நகர இளைஞர் காங்., மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில், நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஏ.பி.டி., சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில், ராஜூ நடராஜ், கொடியேற்றி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட காங்., சிறுபான்மை துறை தலைவர் அன்வர் முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட காங்., தலைவர் பஞ்சலிங்கம், நகராட்சி கவுன்சிலர் அருள் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவியருக்கு, இலவச நோட்டு புத்தகங்கள், காலணிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி லோக்சபா இளைஞர் காங்., சார்பில், டி.கோட்டாம்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், பொள்ளாச்சி லோக்சபா தலைவர் ரசணாம்பிகா தலைமை வகித்தார். நிர்வாகிகள் அர்ச்சனா, விஜயசாரதி, முன்னாள் கவுன்சிலர் செல்லதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி பேசினர். பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, எஸ்.ஐ., காயத்ரி பரிசு வழங்கினர். பொள்ளாச்சி கர்ம வீரர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், நடுப்புணி ஏ.நாகூர் பள்ளியில், தலைவர் ஜெயராஜ் வரவேற்றார். ஜெயசிங் தலைமை வகித்தார். மாணவர்களுககு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரி நன்றி கூறினார்.