/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடலிறக்கத்தை சீராக்கும் மெஷ்: இந்தியாவில் தயாரிக்க வலியுறுத்தல்
/
குடலிறக்கத்தை சீராக்கும் மெஷ்: இந்தியாவில் தயாரிக்க வலியுறுத்தல்
குடலிறக்கத்தை சீராக்கும் மெஷ்: இந்தியாவில் தயாரிக்க வலியுறுத்தல்
குடலிறக்கத்தை சீராக்கும் மெஷ்: இந்தியாவில் தயாரிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2011 01:19 AM
கோவை :''சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில், குடலிறக்கத்தை சரி செய்ய உதவும் வலை பின்னலை (மெஷ்) இந்தியாவிலேயே உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என, 'என்டோஹெர்னியா 2011' மாநாட்டின் தலைவர் டாக்டர் பழனிவேலு கேட்டுக் கொண்டார்.சர்வதேச அளவிலான மூன்று நாள் குடலிறக்க நோய் தொடர்பான மருத்துவ மாநாடு, கோவை லீமெரிடியன் ஹோட்டலில் துவங்கியது.
போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி துவக்கி வைத்து பேசியது: மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினரின் வருகை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவுக்கு மருத்துவத்தின் தரம் உயர்ந்தது மட்டுமல்ல, குறைவான கட்டணமும் இந்தியாவில் மட்டுமே உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகள், தங்கி சிகிச்சை பெறும் முன், சட்ட சிக்கல்கள் எதுவும் உருவாகாமல் மருத்துவமனைகள் கவனமுடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு, அமரேஷ் புஜாரி பேசினார்.இந்திய மருத்துவ சங்கத் தலைவராக தேர்வு பெற்றுள்ள டாக்டர் முருகநாதன் பேசியதாவது:ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகவே 'ஹெர்னியா' எனப்படும் குடலிறக்க நோய் உள்ளது. லேப்ராஸ்கோபிக் முறையில் இதை எளிதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். சில டாக்டர்கள் மட்டுமே இத்தகைய புதிய முறை அறுவை சிகிச்சையை செய்ய முன் வருகின்றனர்.அறுவை சிகிச்சை முறைகளில் வந்தாலும், ஆராய்ச்சி, மேம்பாடு இந்தியாவில் போதுமானதாக இல்லை. மேலை நாடுகளில் ஆராய்ச்சி முறைகளை பின்பற்றுவதால் புதிய யுக்திகள் பல உருவாகின்றன. எனவே, இளைய தலைமுறையினர் புதிய ஆராய்ச்சிகளில் சிகிச்சை முறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சிகிச்சை முறைகளை கற்றுக் கொண்டு அனைவருக்கும் பயன்படும் வகையில் உதவ வேண்டும்.இவ்வாறு, டாக்டர் முருகநாதன் பேசினார்.இங்கிலாந்தில் உள்ள எடின்பெர்க் ராயல் அறுவை சிகிச்சை கல்லூரி டாக்டர் ஸ்டீவ் நிக்ஷன் பேசுகையில்,''சர்வதேச அளவில் பல்வேறு வகையான ஹெர்னியா நோய் ஏற்படுகிறது. புதிய சிகிச்சை முறையை, டாக்டர்கள் கற்றுக் கொண்டு இந்த நோயை குணப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்,'' என்றார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜபாண்டியன் நன்றி கூறினார்.'என்டோ ஹெர்னியா 2011' மருத்துவ மாநாட்டின் தலைவரும் ஜெம் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் நிருபர்களிடம் பழனிவேலு கூறியதாவது:வெளிநாடுகளைச் சேர்ந்த 500 டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். தசை நார்கள் வலுவிழப்பதால், ஹெர்னியா ஏற்படுகிறது. உடல் பருமனும் இதற்கு காரணமாகிறது. லேப்ராஸ்கோப் முறையில் மேற்கொள்ளப்படும் எளிய முறை சிகிச்சையால், இந்த நோய்க்கான சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, குடலிறக்கத்தை சரி செய்ய வலை பின்னல் (மெஷ்) வெளிப்பகுதியிலிருந்து பொருத்தினர். லேப்ராஸ்கோப் முறையில், இந்த சிகிச்சையை உள்புறத்திலிருந்து வலை பின்னலை பொருத்த முடியும். இந்திய வலை பின்னல் அமைப்பு (மெஷ்), பிரான்ஸ், அமெரிக்காவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்கின்றனர். இதன் விலையே 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற நிலையில் இங்கேயே இதை தயார் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வலை பின்னலின் அமைப்பு, 300 முதல் 400 மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு, டாக்டர் பழனிவேலு தெரிவித்தார்.