/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.ஏ.டி. விடுதி மாணவர்கள் அபாரம்
/
எஸ்.டி.ஏ.டி. விடுதி மாணவர்கள் அபாரம்
ADDED : ஜன 01, 2026 05:00 AM
கோவை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) விடுதி மாணவர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் வாலிபால் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற எஸ்.டி.ஏ.டி. விடுதி சபர்பன் பள்ளி மாணவர்கள், இறுதி போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதலிடத்தை பிடித்தனர்.
அதேபோல், திருவண்ணாமலையில் பாரதியார் தின மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கூடைபந்து பிரிவில் பங்கேற்ற, எஸ்.டி.ஏ.டி.விடுதி சபர்பன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திறம்பட விளையாடி இரண்டாம் இடத்தை கைப்பற்றினர்.

