/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3,094 பேருக்கு இருதய குறைபாடு அறிகுறி அடுத்தகட்ட பரிசோதனைக்கு பரிந்துரை
/
3,094 பேருக்கு இருதய குறைபாடு அறிகுறி அடுத்தகட்ட பரிசோதனைக்கு பரிந்துரை
3,094 பேருக்கு இருதய குறைபாடு அறிகுறி அடுத்தகட்ட பரிசோதனைக்கு பரிந்துரை
3,094 பேருக்கு இருதய குறைபாடு அறிகுறி அடுத்தகட்ட பரிசோதனைக்கு பரிந்துரை
ADDED : ஜன 01, 2026 05:01 AM
கோவை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 3,094 பேருக்கு இருதயம் சார்ந்த குறைபாடு இருக்கலாம் என்ற அடிப்படையில், அவர்கள் அடுத்தகட்ட பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆக.,2ம் தேதி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 26 முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.
ஆக., முதல் கடந்த வாரம் வரை நடந்த மருத்துவ முகாம்களில், 50,216 பேர் பரிசோதனை செய்து, பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில், ஆண்கள் 22,628; பெண்கள் 27,588 பேர். இம்முகாம்களில் பங்கேற்ற பெண்களில், 3,579 பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
இம்முகாமில், காது, மூக்கு, தொண்டை, பல், கண் என பல்வேறு பிரிவுகளின் கீழ், நோயாளிகள் தேவை, டாக்டர்கள் பரிந்துரையின் படி பரிசோதனை செய்யப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கு எக்கோ, இ.சி.ஜி., போன்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருதயம் சார்ந்த குறைபாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 3,094 பேர் அடுத்த கட்ட பரிசோதனைக்கு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், 50,216 பேர் பங்கேற்றதில், ஈ.சி.ஜி. 31, 834 பேருக்கும், எக்கோ 2,943 பேருக்கும், எக்ஸ்ரே 2,686 பேருக்கும் 3,579 பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதில், இருதய குறைபாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அடுத்தகட்ட பரிசோதனைகளை செய்ய, 3,094 பேரையும், 194 பேரை கர்ப்பப்பை வாய் பரிசோதனைக்கும் அனுப்பி கண்காணித்து வருகிறோம்.
அடுத்தகட்ட பரிசோதனை முடிந்தால் மட்டுமே, பாதிப்பு உள்ளதா என்பது தெரியும். ஒருவருக்கு காசநோய் இருப்பதை உறுதி செய்துள்ளேம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

