sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவி கொலை: போதைக் கணவன் கைது

/

மனைவி கொலை: போதைக் கணவன் கைது

மனைவி கொலை: போதைக் கணவன் கைது

மனைவி கொலை: போதைக் கணவன் கைது


ADDED : ஜூலை 13, 2011 10:43 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சிங்காநல்லூர், நீலிக்கோணாம்பாளையம், மதுரைவீரன் கோவில்வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(43); கூலித் தொழிலாளி.

இவரது மனைவி பொங்கியம்மாள்(36). இவரும் கூலிவேலைக்கு சென்று வந்தார். குடிக்கு அடிமையான சுப்பிரமணி, தினமும் போதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு போதையில் வந்தவர், சாப்பாடு போடும்படி கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி, பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் சாப்பாடு கிடைக்கும் என்றார். ஆத்திரமடைந்த சுப்பிரமணி, வாசலில் கிடந்த கூரை ஓட்டை எடுத்து மனைவி மீது வீசினார். சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், ரத்த காயத்துடன் கீழே கிடந்த பொங்கியம்மாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நேற்று பகல் பகல் 1.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பொங்கியம்மாள் இறந்தார்.சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து, போதை கணவன் சுப்பிரமணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us