/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
துடியலூர் : அசோகபுரம் ஊராட்சியில் நடந்த பல்வேறு ஊழலை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், அசோகபுரம் ஊராட்சியில் குடிநீர் குழாய் பழுது சரி செய்தது, தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தது, பிளீச்சிங் பவுடர் வாங்கியது, குப்பையை சுத்தம் செய்தது, முட்புதர்களை அகற்றியது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதே போல கடந்த ஜனவரி மாதம் நடந்த கிராமசபா கூட்டத்தில், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் வரை அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அதையும் மீறி, தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் சாந்தாராம், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொருளாளர் தியாகராஜன், ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.