/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 25, 2011 09:38 PM
துடியலூர் : சின்னதடாகத்தில் மரம் நடும் விழா, பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் நடந்தன.கோவை அன்னை அறக்கட்டளை, காஞ்சிபுரம் 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தொண்டு அமைப்பு, சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி., இணைந்து இவ்விழாவை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, துடியலூர் அன்னை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராமன் தலைமை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில், கோவை என்.சி.சி., பயிற்சி கல்லூரியை சேர்ந்த அதிகாரிகள் முருகன், திலக் சிங், ஷேக் ஹுசைன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.