/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்
/
தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்
ADDED : செப் 25, 2011 01:15 AM
அவிநாசி :அவிநாசி 8வது வார்டில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அவிநாசி பேரூராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட பழைய சந்தைக்கடை தோட்டம் உள்ளது.
இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை; ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என கூறி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதில், தேர்தல் புறக்கணிப்பு:சந்தைக்கடை தோட்டம் 8வது வார்டில் கடந்த ஐந்தாண்டில் சாக்கடை வசதி ஏற்படுத்தாததை கண்டித்தும், வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருப்பதை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ''பலமுறை பேரூராட்சிக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ''சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியில்லாமல், குட்டை போல் தேங்கியுள்ளதால், கொசு மூலம் பல்வேறு நோய் தாக்குகிறது; இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். ''இப்பகுதி பிரச்னையை எந்த வேட்பாளர் முடித்து கொடுப்பதாக உறுதியளிக்கிறாரோ, புறக்கணிப்பு முடிவை மாற்றி, அவருக்கு ஓட்டளிப்போம்,'' என்றனர்.