sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடியிருப்பில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

/

குடியிருப்பில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

குடியிருப்பில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

குடியிருப்பில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு


ADDED : அக் 05, 2011 10:12 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை, கவர்க்கல் எஸ்டேட்டில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட 5 காட்டு யானைகள் இரவு 11.00 மணிக்கு அய்யர்பாடி ரோப்வே பகுதிக்கு சென்றது. அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை இடித்து, அரிசியை ருசித்து சாப்பிட்டன. அருகில் உள்ள சத்துணவுக்கூடத்தின் கதவை சேதப்படுத்தியதோடு, பள்ளி கதவு, சர்ச் போர்டு, கேபிள் ஒயர்களையும் இழுத்து சென்றன.

இதனிடையே வனத்

துறையினர் தொழிலாளர்களுடன் இணைந்து நள்ளிரவில் யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல், மீண்டும், மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அதன் பின்னர் அதிக சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

மீண்டும் இதே பகுதிக்குள் நுழையும் என்பதால், மாலை நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் வெளி யே செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வால்பாறை வனச்சரக அலுவலர் லட்சுமணசாமி கூறினார்.






      Dinamalar
      Follow us