/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் கண்காணிப்பு
/
சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் கண்காணிப்பு
ADDED : ஜன 14, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம்:ஜடையம்பாளையம் அப்துல் கலாம் நகர் பகுதியில், விவசாய தோட்டத்து வீடுகளில் உள்ள நாய்களை, சிறுத்தை பிடித்து சென்றுள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில், ஜடையம்பாளையம், அப்துல் கலாம் நகர், எம்.ஜி.ஆர்., நகர், ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இக்குடியிருப்புகள் அருகே விவசாய தோட்டங்களில் உள்ள, ஒவ்வொரு வீடுகளிலும், காவலுக்கு இரண்டு, மூன்று நாய்களை வளர்த்து வருகின்றனர்.
இரு வாரங்களாக, இப்பகுதியில் உள்ள நாய்கள் ஒவ்வொன்றாக காணாமல் போனது. இது, விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. நாய்களின் உடல்கள், புதர்களில் அழுகிய நிலையில் கிடந்துள்ளதை, அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிறுமுகை வனத்துறை அலுவலகத்தில், புகார் தெரிவித்தனர்.
வனத்துறையினர், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்துள்ளனர். இருப்பினும், இதுவரை கேமராவில் சிறுத்தை பதிவாகவில்லை. சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதிகளில், அதன் நடமாட்டத்தை கண்டறிய, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரவில் வனத்துறையினர் ஜடையம்பாளையம், அறிவொளி நகர், சென்னாமலைக்கரடு ஆகிய பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் இரவில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.