/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு'
/
மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு'
ADDED : செப் 06, 2011 01:16 AM
துடியலூர்: லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., போலீசார் நேற்று நள்ளிரவு வரை ரெய்டு நடத்தினர்.
சேலத்தில் 49 லட்ச ரூபாய் சொத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்ட ஏழு பேரை சேலம் நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடர்பாக, ஆக., 7ம் தேதி மார்ட்டின், அவரது கூட்டாளி ஜான் கென்னடி மீது, சி.பி.ஐ., நான்கு வழக்குகளை தொடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் கோவையில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் ரெய்டு நடத்த திட்டமிட்டனர். நேற்று மாலை 4.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள மார்ட்டின் பங்களாவில் ஒரு டி.எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள்., 2 தலைமை காவலர்கள் கொண்ட கேரள மாநிலம், கொச்சின் சி.பி.ஐ., குழு போலீசார் வாடகை காரில் வந்தனர். அப்போது, பங்களாவில் வேலைக்காரர்கள் மட்டும் இருந்தனர். பங்களாவின் அனைத்து கதவுகளை அடைத்த போலீசார் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து ரெய்டு நடத்தினர். சி.பி.ஐ., போலீசாரின் வாகனங்கள் எதுவும் பங்களா 'கேட்' முன் நிறுத்தப்படவில்லை. உள்ளூர் போலீசார் உள்ளிட்ட எவரும் பங்களாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

