/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தினால் என்னவாம்? கிராம மக்கள் தினமும் அவதி
/
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தினால் என்னவாம்? கிராம மக்கள் தினமும் அவதி
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தினால் என்னவாம்? கிராம மக்கள் தினமும் அவதி
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தினால் என்னவாம்? கிராம மக்கள் தினமும் அவதி
ADDED : ஆக 17, 2024 12:11 AM
மேட்டுப்பாளையம்;பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தேரம்பாளையத்தில் அனைத்து ரூட் பஸ்களையும் நிறுத்த,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் -அன்னூர் மெயின் சாலையில் தேரம்பாளையம் உள்ளது. தேரம்பாளையத்தை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.
திருப்பூர் பனியன் கம் பெனிகளுக்கும், கோவைக்கும், 500க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். மேட்டுப்பாளையம் அன்னூர் இடையே ஒரு மணி நேரத்திற்கு, ஒரு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒரு முறை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, தேனி ஆகிய ஊர்களுக்கு செல்லும், ரூட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேரம்பாளையத்தில் அரசு ரூட் பஸ்கள் நிறுத்துவதில்லை. அதனால் காலையில் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், டவுன் பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
மாலை மற்றும் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் அரசு ரூட் பஸ்களில், தேரம்பாளையம் பயணிகளை ஏற்றுவதில்லை என்று, இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட பெள்ளாதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த, கிராம சபை கூட்டத்தில் தேரம்பாளையம் பொதுமக்கள் சார்பில், மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்ற ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன், இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாவட்ட கலெக்டர் இப்பிரச்னை தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களின் நீண்டநாளைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

