ADDED : ஜூலை 14, 2011 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் : அன்னூரில் சர்க்கரை மற்றும் சிறுநீரக பரிசோதனைக்கான இலவச முகாம் 17ம் தேதி நடக்கிறது.
தாசபளஞ்சிக இளைஞர் சங்கங்கள் மற்றும் கோவை எஸ்.பி.டி., மருத்துவமனை சார்பில் இம்முகாம் அன்னூரில் 17ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு பரிசோதிக்கப்படுகிறது. மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் தியாகராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதிக்கின்றனர்.