ADDED : செப் 06, 2011 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, கோவை நகரில் நேற்று 127 'டாஸ்மாக்' மது கடைகள் மாலை முதல் மூடப்பட்டன.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு கோவை நகரம் முழுவதும் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி, நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், நேற்று மாலை 5.00 மணி முதல் நகரில் உள்ள 127 'டாஸ்மாக்' மதுக்கடைகளும் மூடப்பட்டன. மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் இதனால் சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் தவித்தனர்.

