sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடி நிலம் அபகரிப்பு : ஐ.ஜி.,

/

மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடி நிலம் அபகரிப்பு : ஐ.ஜி.,

மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடி நிலம் அபகரிப்பு : ஐ.ஜி.,

மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடி நிலம் அபகரிப்பு : ஐ.ஜி.,


ADDED : ஜூலை 15, 2011 12:57 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மேற்கு மண்டலத்தில் 162 கோடி ரூபாய் மதிப்பிலான 326 ஏக்கர் நில அபகரிக்கப்பட்டுள்ளதாக, மேற்கு மண்டல ஐ.ஜி.,வன்னியபெருமாள் தெரிவித்தார்.

மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் வந்த, மேற்கு மண்டல ஐ.ஜி.,வன்னியபெருமாள், செயின் வழிப்பறி ஆசாமிகள் மூவரை கைது செய்த தனிப்படையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:மேற்கு மண்டலத்தில் கொலை, கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கார், பைக் திருட்டு ஆசாமிகள் குறைந்து விட்டனர். சாதாரண திருட்டு,கொள்ளையும் குறைந்துள்ளது.ஆனால், செயின் பறிப்பு சம்பவங்கள் மட்டும் போலீசாருக்கு சவாலாக உள்ளது. வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுவும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தற்போது, குற்றப்பிரிவில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 ஆயிரம் போலீசார் பயிற்சியில் உள்ளனர். பயிற்சி முடிந்ததும், மேற்கு மண்டலத்தில் 1,500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். மேற்கு மண்டலத்தில் இதுவரை 326.45 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக 710 புகார் மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 59 புகார்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 162 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 32 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டுள்ளது.நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரித்து,நடவடிக்கை எடுக்க ஏ.டி.எஸ்.பி., தலைமையில் மூன்று குழு அமைக்கப்பட உள்ளன. ஒரு குழு புகாரை விசாரிக்கவும், அடுத்த குழு நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்கவும், மற்றொரு குழு அபகரிப்பில் தொடர்புடைய நபர்களைகைது செய்யவும் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று கோவையில் நடக்கிறது.இவ்வாறு, ஐ.ஜி.,வன்னியபெருமாள் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us