ADDED : பிப் 15, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ.,வினர் நினைவஞ்சலி செலுத்தினர்.
கோவை 1998ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, 27ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., சார்பில் அனுசரிக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் பலியான நபர்களின் உருவப்படத்திற்கு, பா.ஜ.,வினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் பா.ஜ.,வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-------

