/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.சி.ஏ., கவுன்சிலிங் 559 பேர் சேர்க்கை
/
எம்.சி.ஏ., கவுன்சிலிங் 559 பேர் சேர்க்கை
ADDED : ஜூலை 27, 2011 02:37 AM
கோவை : கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடப்பாண்டில் எம்.சி.ஏ., மாணவர்களுக்கான கவுன்சிலிங்கின் மூன்றாம் நாளான நேற்று, 559 பேர் சேர்க்கை பெற்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மட்டுமே சேர ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணா பல்கலையின் கீழ் மாநிலம் முழுவதுமுள்ள அரசு, அரசுதவி பெறும், தனியார் இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ., படிப்புக்கு மாணவர்களுக்கான கவுன்சிலிங், கோவை, தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 24ம் தேதி துவங்கியது. எம்.சி.ஏ.,வுக்கு இளநிலை படிப்பு மற்றும் 'டான்செட்' நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கின் மூன்றாம் நாளான நேற்று தரப்பட்டியலில் 32.5 முதல் 28.5 மதிப்பெண் வரையுள்ள 743 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 563 பேர் பங்கேற்றதில், 559 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர். அரசு தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்,''மூன்று நாட்கள் நடந்த கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகள் 29 பேர் உட்பட, மொத்தம் ஆயிரத்து 36 மாணவர்கள் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மட்டுமே சேர ஆர்வம் காட்டுகின்றனர். கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ., படிக்க யாரும் முன்வரவில்லை. இன்று நடக்கும் கவுன்சிலிங்கில் 28 முதல் 25.5 வரை மதிப்பெண் பெற்றுள்ள 782 மாணவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 8ம் தேதி எம்.சி.ஏ., சேர கவுன்சிலிங் நடப்பது குறிப்பிடத்தக்கது,'' என்றனர்.