/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எச்.,க்கு வந்தது 75 யூனிட் ரத்தம்
/
ஜி.எச்.,க்கு வந்தது 75 யூனிட் ரத்தம்
ADDED : ஜூலை 14, 2011 09:20 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் பி.ஏ., பொறியியல்
மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
பி.ஏ.,
கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டியிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு முகாம்
துவக்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பங்கஜம்
முன்னிலையில் வகித்தார். பி.ஏ., கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள்,
கல்லூரி பணியாளர்கள், சிவா பேராமெடிக்கல் செவிலியர்கள் பயிற்சி
மேற்கொள்ளும் மாணவர்கள் உட்பட பலர் ரத்த தான முகாமில் பங்கேற்றனர்.
இம்முகாமில், 75 'யூனிட்' ரத்தம் பெறப்பட்டு பொள்ளாச்சி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்
காஜாமைதீன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தார்.