/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2024 01:27 AM

கோவை;கட்டடத் தொழிலாளர் நல வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நேற்று கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், கட்டடத் தொழிலாளர் நல வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும், நல நிதியை, 5 சதவீதமாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும், வாரிய முடிவுப் படி ஓய்வூதியம் மாதம் ரூ.2,000 வழங்க வேண்டும், மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.