ADDED : மார் 14, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; முதலமைச்சரின் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில் துடியலுார் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி காளியப்பா கவுண்டர் வீதி முதல் ரிச்சர்ட் வீதி வரை, 43 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பணிகளை துவக்கி வைத்தார்.