/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 பவுன் நகை பறிப்பு: 3 மணி நேரத்தில் மீட்பு
/
10 பவுன் நகை பறிப்பு: 3 மணி நேரத்தில் மீட்பு
ADDED : செப் 11, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே பன்னிமடை ஆர்.ஆர். அவன்யூவில் வசிப்பவர் பார்வதி, 64. இவரது வீட்டில் பீகாரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் பணியாற்றினான்.
மாலை நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பார்வதியிடமிருந்து, 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினான். தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தடாகம் எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து, அதே பகுதியில் சுற்றி திரிந்த சிறுவனை, 3 மணி நேரத்தில் பிடித்தனர். அவரிடம் இருந்த, 10 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.

