/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்சய திருதியை முன்னிட்டு 100 கிலோ தங்கம் விற்பனை!
/
அட்சய திருதியை முன்னிட்டு 100 கிலோ தங்கம் விற்பனை!
அட்சய திருதியை முன்னிட்டு 100 கிலோ தங்கம் விற்பனை!
அட்சய திருதியை முன்னிட்டு 100 கிலோ தங்கம் விற்பனை!
ADDED : மே 11, 2024 11:21 PM
கோவை : அட்சய திருதியை முன்னிட்டு, கோவையில் 100 கிலோ தங்கம் விற்பனையானது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 18.5 சதவீதம் குறைவாகும்.
அட்சய திருதியை, நேற்று முன்தினம் அதிகாலை 4:17 மணிக்கு திருதியை திதியில் துவங்கி நேற்று (சனிக்கிழமை) மதியம் 2:50 மணிக்கு நிறைவடைந்தது. அந்த நேரத்தில் தங்கம் வெள்ளி ஆபரணங்களை, பலரும் தேர்வு செய்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்த பலரும், நகைகளை பெற்றுக்கொண்டனர்.
கோயமுத்துார் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில்,''இந்த அட்சஷய திருதியைக்கு, எதிர்பார்த்த அளவு விற்பனை இருந்தது.ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடந்தது, விற்பனை குறைந்தும் முதலீடு அதிகமாக நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதால், பெரும்பாலானோர், நகைகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறைந்து போனது,'' என்றார்.