/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'100 சதவீதம் வாக்குப்பதிவு அதுவே எங்கள் பிரசாரம்'
/
'100 சதவீதம் வாக்குப்பதிவு அதுவே எங்கள் பிரசாரம்'
ADDED : மார் 29, 2024 12:47 AM
கோவை;''கோவை லோக்சபா தொகுதி மக்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்; எங்களது கோரிக்கையை முழுமையாக ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு,'' என, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியில் நடந்த இந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் இவர் கூறியதாவது:
இந்து முன்னணி, சில கோரிக்கைகளை எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளோம். இதுவரை எந்த கட்சியும் அதை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி வேட்பாளர்கள் ஆதரவு கேட்டுள்ளனர். எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், நாங்கள் ஆதரவு தருவோம். வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்கள் பிரசாரம்.
இவ்வாறு, அவர்கூறினார்.

