/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீதம் ஓட்டு விழிப்புணர்வு பிரசாரம்
/
100 சதவீதம் ஓட்டு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : மார் 29, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்:சூலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தும் வகையில் பேரணி சென்றனர்.
கல்லூரி வளாகத்தில் இருந்து, பேரணியை செயல் அலுவலர் சதீஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, '100 சதவீதம் ஓட்டு' என்ற வாசகம் வடிவில் மாணவ, மாணவியர் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் லலிதாமணி, கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்

