/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2024 12:56 AM

சூலூர்;வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்து வரும் நிலையில், அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது.
வேட்பாளர்கள் பம்பரமாய் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், 100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் சார்பில் தொகுதி வாரியாக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சூலூர் தொகுதியில், கையெழுத்து இயக்கம், செல்பி எடுத்தல், கோலம் வரைதல், பேரணி என, பல வகைகளில் மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சூலூர் அடுத்த தனியார் பள்ளியில், மாதிரி தேர்தல் நடத்தியும், ரங்கோலி கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, சூலூர், கருமத்தம்பட்டி ஆர்.ஐ.,க்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

