/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள வாலிபர்களிடம் 1.020 கிலோ கஞ்சா
/
கேரள வாலிபர்களிடம் 1.020 கிலோ கஞ்சா
ADDED : ஜூன் 27, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ரேஸ்கோர்ஸ் போலீசார் நவ இந்தியா செல்லும் வழியில் உள்ள தனலட்சுமி நகர், 'எஸ் பெண்ட்' பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த, 1.020 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், செல்போன் ஒன்று, ரூ.150 ரொக்கம், டூ வீலர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இவர்கள் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த அப்ஜித், 20, பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அபினத்,21 என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.