/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை ஏலத்தில் கொப்பரை கிலோ ரூ.105.99
/
ஆனைமலை ஏலத்தில் கொப்பரை கிலோ ரூ.105.99
ADDED : செப் 11, 2024 10:31 PM
ஆனைமலை : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோவுக்கு அதிகபட்சமாக, 105.99 ரூபாய் விலை கிடைத்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது. முதல் தர கொப்பரை, 268 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 98.05 ரூபாய் முதல், 105.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 237 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு,60.99 முதல், 88.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 505 கொப்பரை மூட்டைகளை, 78 விவசாயிகள் கொண்டு வந்தனர்; எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 21.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 227.25 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், 'தேங்காய் வரத்து குறைந்து வருவதால், கொப்பரை உற்பத்தியும் சரிந்துள்ளது. இதனால், வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொப்பரை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொப்பரை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் நடக்கும் ஏலத்தில் விற்பனை செய்து பலனடையலாம்,' என்றனர்.