/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவசர தேவைக்கு உதவும் '108' ஆம்புலன்ஸ் சேவை
/
அவசர தேவைக்கு உதவும் '108' ஆம்புலன்ஸ் சேவை
ADDED : செப் 17, 2024 04:43 AM
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக கடந்த எட்டு மாதங்களில், 58,162 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த, 2008ல், அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக, '108' ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. அதன்படி, தற்போது, தமிழகத்தில், 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில், அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட, 48 ஆம்புலன்ஸ்; அதிநவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட, 11 ஆம்புலன்ஸ்; பச்சிளம் குழந்தைகளுக்கான 2 ஆம்புலன்ஸ் என, மொத்தம், 61 எண்ணிக்கையில், '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த, ஜன., முதல் ஆக., மாதம் வரை, கோவை மாவட்டத்தில், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, 58,162 பேர் பயனடைந்துள்ளனர்.
இது குறித்து, '108' ஆம்புலன்ஸ் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''பிரசவ மருத்துவ தேவைக்காக, 8,761 பேர், விபத்து சிகிச்சைக்காக 15,128 பேர், இருதய சிகிச்சைக்காக 4,104 பேர், இதர மருத்துவ தேவைக்காக 30,169 பேர், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக பயன் அடைந்துள்ளனர்,'' என்றனர்.