/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
/
10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
ADDED : ஏப் 04, 2024 10:46 PM

பொள்ளாச்சி;பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு, மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 52 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று, அறிவியல் தேர்வு நடந்தது. மொத்தம், 9,097 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதேநேரம், 191 மாணவ, மாணவியர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:
விஸ்வதீப்தி பள்ளி மாணவர் யஷ்வந்த்அஜய்: தேர்வை எதிர்கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்த்த போது, நன்கு பயிற்சி பெற்றிருந்த வினாக்களே இடம்பெற்றிருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.
தாரணி: தேர்வுக்கு முன், ஆசிரியர் வாயிலாக பயிற்சி பெற்றிருந்ததால், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. அதனால், அனைத்து வினாக்களுக்கும் விரைந்து பதில் எழுதினேன். தேர்வு எளிதாக இருந்ததால், முழு மதிப்பெண் கிடக்கும்.
நந்தகிஷோர்: எதிர்பார்த்ததை விட வினாக்கள் அனைத்தும் மிக எளிதாக இருந்தது. அனைத்துமே படித்த வினாக்களாக இருந்தது. வினாக்களுக்கு சரியாக பதில் எழுதியுள்ளேன். கண்டிப்பாக இந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
பரத் நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி அஸ்மிதா: அனைத்து பகுதிகளையும் படித்து திருப்புதல் செய்திருந்ததால், தேர்வு எளிதாக இருந்தது. குறிப்பாக, ஏழு மதிப்பெண் வினாக்கள் மிக எளிதாக இருந்தன. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால் முழு மதிப்பெண் கிடைக்கும்.
ஐஸ்வர்யா: அறிவியல் தேர்வு குறித்து பயம் இருந்தது. ஆனால், வினாக்கள் எளிதாக இருந்ததால் தேர்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். தேர்வுக்கு முன், நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். எதிர்பார்க்கும் மதிப்பெண் கண்டிப்பாக கிடைக்கும்.
விமல்ராஜ்: ஒரு மதிப்பெண் வினாக்களில் உயிரியல் பகுதியில் ஒன்று மட்டும் உட்புற வினாவாக இருந்தது. ஆசிரியர்களின் பயிற்சியின் காரணமாக அவ்வினாவும் எளிமையாகவே எழுத முடிந்தது. பல முறை பயிற்சி செய்த வினாக்களே இடம்பெற்றிருந்ததால், தேர்வு மகிழ்ச்சியுடன் எழுதியுள்ளேன்.
உடுமலை
உடுமலை ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
நிதின்: அறிவியல் தேர்வு குறித்து அச்சமாகவே இருந்தது. ஆனால் ஓரளவு எளிமையாகதான் இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், ஒரு வினா பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. இருந்தாலும், தேர்வின் போது விடை சரியானது தானா என குழப்பம் ஏற்பட்டது. மற்ற பகுதிகள் அனைத்தும் ஈஸி தான்.
அட்சயகீர்த்தி: அறிவியல் தேர்வில், சில பகுதிகளில் நேரடி வினாக்கள் அதிகம் கேட்கப்படவில்லை. ஒரு மதிப்பெண் பிரிவில், சில வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன. பயிற்சி செய்த வினாக்கள் கேட்கப்பட்டன. பல வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து இடம் பெற்றதால், வினாத்தாள் சுலபம் என கூற முடியவில்லை. விடைகளை எழுதுவதற்கு அதிக நேரம் எடுத்துகொள்ள வேண்டியிருந்தது.
ஏஞ்சலின்பிளஸ்ஸி: அறிவியல் தேர்வு வினாத்தாள் சிறிது கடினமாகத்தான் இருந்தது. நெடுவினா பகுதிகளில், இயற்பியல் பிரிவில் கூட தெரியாத வினாக்களை சாய்ஸ் விடும் வகையில் இருந்தது. வேதியியல் கட்டாய வினாப்பகுதிகள் மிகவும் கடினமாகதான் இருந்தது. வினாக்கள் பயிற்சி பகுதிகளில் இல்லாமல், பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
தேவதர்ஷினி: அறிவியல் பாடத்தேர்வில் வினாத்தாள் எதிர்பார்த்த வகையில் இல்லை; கடினமாகவே இருந்தது. எளிதில் சென்டம் பெறலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவது கடினம். நான்கு மதிப்பெண் பகுதியில், எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வினாத்தாள் கடினமாக இருப்பினும், எளிதில் விடைகளை எழுத முடிந்தது. சென்டம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
குருபிரசாத்: பள்ளியில் பயிற்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் வந்தன. கட்டாய கணக்கு பகுதியில், இயற்பியலில் இல்லாமல், வேதியியல் பிரிவில் சமன்பாடுகள் வந்ததால் அதுவும் எளிமையாக இருந்தது. நெடுவினாவில் இயற்பியலில் நேரடி வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன. வேதியியல் பகுதியில் நேரடியாகவும், பாடத்தின் உள்ளிருந்தும் கலந்து கேட்கப்பட்டதால், யோசித்து விடை எழுத வேண்டியிருந்தது.

