sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிது! மாணவ, மாணவியர் உற்சாகம்

/

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிது! மாணவ, மாணவியர் உற்சாகம்

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிது! மாணவ, மாணவியர் உற்சாகம்

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிது! மாணவ, மாணவியர் உற்சாகம்


ADDED : மார் 26, 2024 11:06 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட பொதுத்தேர்வு, மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 50 மையங்களில், தமிழ்ப்பாடத் தேர்வு நேற்று நடந்தது.

தனித்தேர்வருக்கு, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை துாய இருதய பெண்கள் பள்ளியில் தேர்வு நடந்தது. அதன்படி, 4,407 மாணவர்கள், 4,560 மாணவியர் என, 8,967 பேர் தேர்வு எழுதினர். 120 மாணவர்கள், 61 மாணவியர் என, 181 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். அதேபோல, தனித்தேர்வர்களில், 94 மாணவர்கள், 36 மாணவியர் என, 130 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 7 மாணவர்கள், ஒரு மாணவி என, 8 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:

கேசவ் வித்யா மந்திர் பள்ளி மாணவி சஹானா: ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், 5 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த சில வினாக்கள், பாடத்தின் உட்புறத்தில் இருந்து கேட்கப்பட்டது. தேர்வுக்கு முன்னரே நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.

தனிஷ்கா: அனைத்து வினாக்களும் எளிமையாக அமைந்திருந்தது. குறுவினா பகுதிகள் மற்றும் நெடுவினா பகுதிகள் அனைத்திற்கும் நன்றாக பதில் எழுதி உள்ளேன். ஆசிரியர் வாயிலாக நல்ல பயிற்சி பெற்றிருந்ததால், தேர்வை விரைந்தும், சரியான பதிலையும் எழுத முடிந்தது.

ரோஹித் விஷ்ணு: ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண்களில் முதல் வினா, புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பயிற்சியின் காரணமாக அந்தக் வினாக்களுக்கு சிந்திந்து விடை எழுதும்படி இருந்தது. நெடுவினா எளிதான முறையில் இருந்தது.

கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் தன்வந்த்: தமிழ்ப்பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் ஒரு வினா மட்டும் அகவினாவாக, இலக்கணம் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தீவிர பயிற்சி செய்திருந்ததால், தேர்வை எளிதாக எழுத முடிந்தது. அதேபோல, 2,3 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் புறவினாவாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

லோக்சனா தர்ஷினி: எதிர்பார்த்ததை விட தமிழ்ப்பாடத் தேர்வு எளிமையாக இருந்தது. 1,2 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புற வினாக்களாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் ஒரு வினா மட்டும் அகவினாவாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளதால், நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

ராகுல்வர்ஷன்: தமிழ்ப்பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலானவை, புற வினாக்களாக இருந்தது. தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதினேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.

உடுமலை


உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:

ெஷரிப்: தமிழ் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. வினாக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. முதல் தேர்வு சுலபமாக இருந்ததால், மகிழ்ச்சியாகவும் உள்ளது. தேர்வு முடித்துவிட்டு, மீண்டும் சரிபார்ப்பதற்கும் நேரம் கிடைத்தது.

கமல்ராஜ்: தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில், சில பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. இதனால் வினாவை புரிந்துகொண்டு விடை எழுத குழப்பமாக இருந்தது. மற்ற அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் எளிதாக இருந்ததால் முழு மதிப்பெண் கிடைக்கும்.

கவிஷ்: முதல் தேர்வு என்பதால் சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், வினாத்தாளை பார்த்ததும் மகிழ்ச்சியானது. எளிதில் விடை எழுதும் வகையில் தான் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் சிலவும், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினாவும் குழப்பும் வகையில் இருந்தன.

நிதிஷ்குமார்: பயிற்சி தேர்வுகள், முந்தைய தேர்வுகளில் அதிகம் கேட்கப்பட்ட பல வினாக்கள் பொதுத்தேர்விலும் வந்திருந்தன. இதனால், சுலபமாக விடை எழுதிவிட்டேன். தமிழ் பாடத்துக்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கும் என பயந்தேன். ஆனால், எளிதில் விடை எழுதிவிட்டு, சரிபார்க்கவும் முடிந்தது.

கதிர்: தமிழ் பாடத்தேர்வில், அடிக்கடி தேர்வில் கேட்கப்பட்ட சில வினாக்கள் வந்ததால், விரைவாக விடை எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் பகுதிகளை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சிறப்பாக பதிலளித்துள்ளேன்.






      Dinamalar
      Follow us