/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு
/
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு
ADDED : பிப் 24, 2025 09:58 PM

வால்பாறை,; வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, வால்பாறையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு 22ம்தேதி துவங்கி, வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, வால்பாறை, சின்கோனா, அட்டகட்டி, சோலையாறுடேம் உள்ளிட்ட, 7 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை தாலுகாவில், மொத்தம், 430 மாணவர்கள் செய்முறை தேர்வை எதிர்கொள்கின்றனர். நேற்று அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள், ஆர்வத்துடன் செய்முறை தேர்வை எழுதினர். தேர்விற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டது.