/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
112 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
/
112 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
ADDED : பிப் 25, 2025 10:16 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில்,112 கர்ப்பிணி பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு நடத்தி, சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
காரமடை வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு விழா, மேட்டுப்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு காரமடை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பாத்திமா ரோஷன் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் கவிதா வரவேற்றார். தங்கமணி முன்னிலை வகித்தார்.
சமூகப் பணியாளர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா, கிழக்கு பொறுப்பாளர் கல்யாண சுந்தரம், டாக்டர்கள் ஜெயராம், சவுமியா, தமிழ் சங்க தலைவர் சோலைமலை உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில், 112 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புசீர்வரிசைகள் வழங்கப்பட்டன. மேற்பார்வையாளர் பிரேம ஜெயந்தி நன்றி கூறினார்.

