/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறையில் 11,910 பணியிடங்கள் காலி: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
/
வருவாய்த்துறையில் 11,910 பணியிடங்கள் காலி: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
வருவாய்த்துறையில் 11,910 பணியிடங்கள் காலி: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
வருவாய்த்துறையில் 11,910 பணியிடங்கள் காலி: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
ADDED : ஜூலை 11, 2011 10:29 PM
பொள்ளாச்சி : தமிழகத்தில் வருவாய்த்துறையில் தாசில்தார் முதல் கிராம உதவியாளர் வரை 11,910 பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசுத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு அதிகமுள்ள வருவாய் துறையில், காலியிடங்கள் நிரப்பாமல் உள்ளதால், அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் 32 மாவட்டமும், 220 தாலுகாவும், 76 வருவாய் கோட்டமும், 1,127 வருவாய் உள்வட்டமும், 16,564 வருவாய் கிராமங்களும் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து 200 தாசில்தார் பணியிடமும், 240 துணை தாசில்தார் பணியிடமும் காலியாக உள்ளது. 1,870 உதவியாளர் பணியிடமும், 1,630 இளநிலை உதவியாளர் பணியிடமும், 400 பதிவறை எழுத்தர் பணியிடமும், 900 அலுவலக உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. மொத்தம் 5,240 காலி பணியிடங்கள் உள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 5,320 ம், கிராம உதவிபணியாளர்கள் 1,350ம் காலியாக உள்ளன. வருவாய் துறையில் தாசில்தார் முதல் கிராம உதவியாளர் வரையிலும் மொத்தம் 11,910 பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்ப வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வருவாய் துறையில் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், அன்றாட பணிகளும், மக்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ்களும் காலதாமதமாகிறது. காலியிடங்கள் பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அனைத்து பணியிடங்களும் தேர்வாணையம் மூலமே நிரப்ப வேண்டும். அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் காலிப்பணியிடங்கள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கும். இப்பிரச்னைக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும்' என்றார்.