/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலிக்கநாயக்கன்பாளையத்தில் 12ல் மக்கள் தொடர்பு முகாம்
/
கலிக்கநாயக்கன்பாளையத்தில் 12ல் மக்கள் தொடர்பு முகாம்
கலிக்கநாயக்கன்பாளையத்தில் 12ல் மக்கள் தொடர்பு முகாம்
கலிக்கநாயக்கன்பாளையத்தில் 12ல் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஜூன் 07, 2024 01:18 AM
கோவை;கோவையை அடுத்த பேரூர் தாலுகாவுக்குட்பட்ட, கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்திலுள்ள, மணி மஹால் மண்டபத்தில் வரும். 12 அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
முகாமிற்கு முன்னதாக வரும் 7 ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனைத்து துறை அலுவலர்கள் முன்னி லையில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) கலிக்கநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.
மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்தி குமார் வழங்குகிறார்.