/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில ஜூனியர் தடகள போட்டியில் கோவையை சேர்ந்த 120 பேர் பங்கேற்பு
/
மாநில ஜூனியர் தடகள போட்டியில் கோவையை சேர்ந்த 120 பேர் பங்கேற்பு
மாநில ஜூனியர் தடகள போட்டியில் கோவையை சேர்ந்த 120 பேர் பங்கேற்பு
மாநில ஜூனியர் தடகள போட்டியில் கோவையை சேர்ந்த 120 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 03, 2024 09:54 PM
கோவை : சென்னையில் நடக்கும் மாநில அளவிலான ஜூனியர் தடகளப்போட்டியில், கோவை மாவட்ட அணி சார்பில் 120 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 36வது தமிழ்நாடு மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நாளை துவங்கி 7ம் தேதி வரை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். வீரர் - வீராங்கனைகளுக்கு, 100மீ., 200மீ., 400மீ., 800மீ.,1500மீ., 500மீ.,10,000மீ., ஓட்டப்பந்தயம், நடையோட்டம், தடை தாண்டும் ஓட்டம், ஸ்டீபிள் சேஸ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் த்ரோ உள்ளிட்ட, அனைத்து விதமான தடகளப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இப்போட்டியில், கோவை மாவட்டம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பல்வேறு கிளப்களை சேர்ந்த 72 வீரர்கள், 48 வீராங்கனைகள் 120 பேர் பங்கேற்கின்றனர்.
போட்டியின் ஒரு பகுதியாக, உலக சாதனை முயற்சிக்காக, போட்டியில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகள், போதை கலாசாரத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்கின்றனர்.