ADDED : ஆக 18, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:கஞ்சப்பள்ளி, அழகாபுரி நகரை சேர்ந்தவர் காந்திமதி, 50. இவரது ஓட்டு வீட்டில், கடந்த 9ம் தேதி பட்டப் பகலில் மர்ம நபர் புகுந்து, 14 சவரன் நகையை திருடி சென்றார்.
இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 'சிசி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் சீர்காழியைச் சேர்ந்த பிரகாஷ், 40. என்பவர் திருடியது தெரிய வந்தது.
எஸ்.ஐ., ராஜேந்திரன், முதல்நிலை காவலர் கருணாகரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் பிரகாசை கண்காணித்து பிடித்து, 14 சவரன் நகையை மீட்டனர். பிரகாஷ் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

